Posts

பாரி வள்ளல்

Image
பாரி வள்ளல் பறம்பு மலையில் காணப்படும் பாரி முல்லைக்குத் தேரீயும் சிலை வடிவக் காட்சி. வேள்பாரி பறம்பு மலையை தலைமை இடமாய் கொண்டு ஆட்சி செய்த குறுநில மன்னர் ஆவார். கடைச்சங்கக்  காலத்தைச் சார்ந்தவர். வேளிர் குலத்தில் பிறந்ததால் வேள்பாரி என அழைக்கப்பட்டார். பாரி பறம்பு மலையையும் அதனைச் சூழ்ந்த பகுதிகளையும் ஆண்டவர். பறம்புநாடு முந்நூறு (300) ஊர்களைக் கொண்டதாகும். பறம்புமலை, பிறம்பு மலை என்றாகி இப்பொழுது 'பிரான்மலை' என்று அழைக்கப்படுகிறது. அப்போதைய பாண்டிய அரசின் எல்லையின் அருகில் வரும். இதற்கு இன்னொரு பெயர் 'கொடுங்குன்றம்' என்பதாகும். பிரான்மலை சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், காரைக்குடி திருப்பத்தூர் வட்டத்தில் சிவகங்கை ஒன்றியத்தில் கிருங்காக்கோட்டை என்னும் ஊரின் அருகில் உள்ளது. பாரியின் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 300 கிராமங்களே இருந்தன. அப்படி இருந்த போதிலும் அவர் மூவேந்தர்களை விட பெரும் புகழ் பெறக்காரணம் அவரது கொடைத்தன்மையே. கேட்போருக்கு இல்லை எனாது அளிப்பவர். இவர் கடையேழு வள்ளல்களில்  ஒருவராகச் சங்க இலக்கியத்தில் போற்றப்படுபவர். புலவர் கபிலர்  பாரியி...

மலையமான் திருமுடிக்காரி 2

Image
மலையமான் ஆட்சி மொழி தமிழ் குலப்பெயர் மலையமான் தலைநகரம் திருக்கோயிலூர் மலையமான் சேர நாட்டு குறுநில மன்னர்கள் வம்சத்துள் ஒன்றாகும். அதில் மலையமான் திருமுடிக்காரி  என்பவன் சங்க காலத்தில் வாழ்ந்த மன்னர்களில் ஒருவன். இவன் சிறந்த வீரன்; பெரிய வள்ளல்; புலவர்களால் புகழ்ந்து பாடப்பட்டவன். இவனை கோவற் கோமான் என்று சங்க இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளதால் இவன் கோவலர் குடியை சேர்ந்தவன் என்பது தெளிவாகிறது.மேலும் கல்வெட்டில் இவர்கள் யது வம்ச யாதவர்கள் என்றும் பதிவு செய்து உள்ளார்கள்.இவர்கள் திரு கோவலர் ஊரை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்துள்ளார்கள் திருக்கோயிலூருக்கு அருகே இருக்கும் பண்டையகால குன்று கபிலர் குன்று. சங்க காலத்தில் மலையமான் குல மரபினர் இந்தப் பகுதியை ஆண்டு வந்ததாக இலக்கியங்கள் கூறுகிறது. சங்ககால புலவரான கபிலர் வள்ளல் பாரியின் நெருங்கிய நண்பர் ஆவார். பாரிக்கு கிடைத்த புகழைக் கொண்டு பொறாமையடைந்த மூவேந்தர்கள் பாரியையும், பறம்ப நாட்டையும் முற்றுகையிட்டு அழித்து விட்டனர். தன் பெண்மக்கள் இருவரையும் தன் உற்ற நண்பரான கபிலரிடம் அடைக்கலமாக தந்து விட்டு பாரி உயிரை நீத்தார். நண்பரின்...

மலையமான் திருமுடிக்காரி

Image
காரி கடையெழு வள்ளல்களுள்  ஒருவர். திருக்கோயிலூரைத் தலைநகராகக் கொண்டு மலாட்டை ஆட்சி புரிந்தவர். திருக்கோயிலூர்க்கு மேற்கே தென்பெண்ணையாற்றின்  தென்கரை அடங்கிய பகுதியே "மலாடு" ஆகும். இவர் மலையமான் திருமுடிக்காரி என்றும், மலையமான் என்றும், கோவற் கோமான் என்றும் அழைக்கப்படும் வள்ளலாவார். இரவலரிடம் எப்போதும் அருள் நிறைந்த சொற்களைப் பேசும் இயல்பினர். உலகத்தார் கேட்டு வியக்கும் வகையில் இவர் கொடுத்த கொடை ஒலிக்கும் மணியைக் கழுத்திலும் ஆடுகின்ற அழகிய ‘தலையாட்டம்’ என்ற அணியைத் தலையிலும் அணிந்த குதிரையையும் ஏனைய செல்வங்களையும் இனிய மொழிகளுடன் இரவலர்க்கு இல்லை என்னாது அளித்தார். காரியைப் போற்றிப் பாராட்டிப் புலவர்களான கபிலர், பெருஞ்சாத்தனார், நப்பசலையார்  ஆகியோர் பாடிய பாடல்கள் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன. இந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தய தமிழகத்தில் சேர, சோழ, பாண்டிய நாடுகளுக்கிடையே, தென்பெண்ணை ஆற்றங்கரையில் ஒரு நாடு அமைந்திருந்தது. மலைகள் அதிகம் கொண்டது என்பதால் மலையமா...

தண் நிழல் வாழ் நற் குடி.....

Image
சோழமண்டல சதகம் கூறும் உடையார் குலமும் சேதிராயர் இனமும்.   ................................................................................................................................................................... உடையார் குலத்தில் பலவகையும் உயர்வே ளாளர் பலவகையும் குடையார் குலத்தில் பலவகையும் கோனார் குலத்தில் பலவகையும் அடைய வாயில் உடையாராய்& அளகே சனைப்போல் அருங்கடலின் மடையார் செல்வம் பெரிதாக வளம்சேர் சோழ மண்டலமே 30 உடையார், வேளாளர், குடையார், கோனார் ஆகிய பல குடியில் பல வள்ளல்கள் குபேரனைப் போல் பெரும் செல்வம் பெற்றுச் சோழநாட்டில் வாழ்ந்தனர். மோட்டெருமை வாவிபுக முட்டுவரால் கன்றுஎன்று வீட்டளவும் பால்சொரியும் வெண்ணையே நாட்டில் அடையா நெடுங்கதவும் அஞ்சல்என்ற சொல்லும் உடையான் சரராமன் ஊர் என்றார் கம்பர். சரராமன் - சடையப்ப வள்ளல் - உடையார் - பார்க்கவ குலத்தினர். சுருதிமானும், மலையமானும் அவருடன் சேர்ந்தவர் ஆவர். ................................................................................................................. வள்ளல் குலத்தோராக கம்பன் கூறு...

மலையமான் என்னும் மன்னிய சேர குலத்தோன்றல்-5

Image
மறவர்களுக்கும் பார்க்கவ மலையமான் குலத்தவருக்குமான இன ஒற்றுமைகள்: சேதுபதி(செம்பியன்) மன்னர்களும் சிவகங்கை(கௌரி வல்லபர்) மன்னர்களும் பார்க்கவ குலத்தாரைப் போல் உடையார்தேவர் என்று பட்டம் உடையவர்கள் .இந்த பட்டம் எந்த வேறு குலத்தாரிடமும் கிடையாது.பாரி ஆண்ட பிரான்மலையை ஆண்ட அழகன் குமரன் நம்பிராஜன் உடையநயினார்(வீர கேரளன்) பட்டம் உடையவர். பண்டாரத்தார்: பண்டாரத்தார் பட்டம் பார்க்கவ குல உடையாரிடம் உண்டு. சேத்தூர் ஜமீன்-சேவுக பாண்டியத்தேவரும்,கொல்லம்கொண்டான் ஜமீன்-வாண்டாய தேவரும் "வணங்காமுடி பண்டாற மறவர்" என்ற உட்பிரிவை சார்ந்தவர்கள். அணஞ்சான்: பார்க்கவ குலத்தாரிடம் அணஞ்சான் பட்டம் உண்டு: (எ-டு)நுணாங்குறிச்சி சுருதிமான் அணஞ்சா ஆனைவிடப்பாடி       இது போன்று  சொக்கம்பட்டி ஜமீன் - "செம்புலி" சின்ன அணைஞ்சா தேவர் என்ற பட்டம் உடையவர். மறவர்குலத்தவரான அழகு முத்து சேர்வையின் முன்னோராக "உத்தம சோழ கோன் மிலாடுடையார்" என்ற பட்டம் உடையவர். தம் முன்னோரின் பட்டமான சோழ கோன் தான் அழகு முத்து கோனாக மருவியுள்ளது. பார்க்கவ குலத்தில் உத்தம சோழ மிலாடுடையான் என்ற மன்னர் இ...

மலையமான் என்னும் மன்னிய சேர குலத்தோன்றல்-4

சேலம் கல்வெட்டு: சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் பேளூர் தான் தோன்றியவார் கோயில் முன் புதைந்து கிடந்த தூண் கல்வெட்டு ஒன்று கல்வெட்டு ஆய்வாளர் புலவர் துரைசாமி அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது,அதில் பார்க்கவ கோத்திரத்து மிலாடுடையார் செம்பியன் மிலாடுடையார் என்ற மன்னர் பற்றிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தென்னார்க்காடு மாவட்டம் எலவானச்சூர் சிவன் கோவில் கல்வெட்டு,மற்றும் திருக்கோவில் வீரட்டானேஸ்வரர் கோவில் கல்வெட்டு. முதலாம் ராஜேந்திர சோழரது ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட மேற்கண்ட இடங்களில் உள்ள கல்வெட்டுகளில் பார்க்கவ கோத்திரத்து ஆதவ வீமனை உத்தம சோழ மிலாடுடையான். என்ற மன்னன் இருந்ததான குறிப்புகள் காணப்படுகிறது பார்க்கவ குலத்தாருக்கும் கள்ளர்,மறவர் இனத்திற்குமான ஒற்றுமை ஆதாரங்கள்: கள்ளர்களுக்கும் பார்க்கவகுல சகோதர கூறுகள்: இன்றைய பார்க்கவ குலத்தவர்கள் தஞ்சை கள்ளர்களின் உட்பிரிவினரே என்று வரலாற்று ஆய்வாளர் கூறுகின்றனர்.ஆனால் பார்க்கவர்கள் தனித்தே இயங்கு கின்றனர். பாரி மற்றும் மலையமான்களின் வம்சத்தினராகவே வரலாற்று ஆய்வுகள் இவர்களைக் கூறுகின்றன .தற்காலத்தே இவர்கள் பார்கவ குல மூப்பனார், பார்கவ குல ...

மலையமான் என்னும் மன்னிய சேர குலத்தோன்றல்-3

Image
மலையமான்கள் பார்க்கவ குலத்தார் எனக்கூறும் கல்வெட்டுகள் ஆதாரம். மலையமான்கள் தங்கள் இனம் என்று பல்வேறு இனத்தினரும் உரிமை கோரும் போது மலையமான் மன்னர்களே தங்களை பார்க்கவ குலத்தவர் எனக்கூறும் ஆதாரங்களில் முதன்மையானது........... திருக்கோவிலூர் திருமால் கோவிலில் உள்ள கல்வெட்டு செய்தி: "'மிலாடான ஜனநாத வள நாட்டுக் குறுக்கைக் கூற்றத்துப் பிரமதேயம் திருக்கோவலூரான ஸ்ரீ மதுராந்தகச் சதுர்வேதி மங்கலத்து திரு விடைக் கழி ஆழ்வார் ஸ்ரீ விமானம் முன்பு இட்டிகை படையாய்ப் பலகை பிளந்தமை கண்டு பார்க்கவ வம்சத்து மிலாடுடையார் இரண கேசரி இராமரான நரசிங்க வர்மர் கோயிலை இழிச்சி கற்கொண்டு ஸ்ரீ விமானமும் மண்டபமும் எடுப்பித்து முத்துப் பந்தலுங் கொடுத்து முன்பு கல்வெட்டுப் படியுள்ள நிபந்தங்கள் எல்லாம் ஸ்ரீ விமானத்தே கல்லுவெட்டு வித்தார் நரசிங்க வர்ம ரென்று அபிஷேகம் பண்ணி முடிகவித்து மிலாடு இரண்டாயிரம் பூமியும் ஆண்ட மிலாடுடையார் நரசிங்க வர்மர். சந்திராதித்த வல் எரிக்க வைத்தா திரு நந்தா விளக்கு இரண்டு இவைக்கு விளக்கெரிக்க கொடுத்த சாவா மூவாயப் பெரும்பசு அறுபத்து நாலு." திருக்கோவிலூரிலுள்ள திருமால் கோவ...