மலையமான் என்னும் மன்னிய சேர குலத்தோன்றல்-4
சேலம் கல்வெட்டு:
சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் பேளூர் தான் தோன்றியவார் கோயில் முன் புதைந்து கிடந்த தூண் கல்வெட்டு ஒன்று கல்வெட்டு ஆய்வாளர் புலவர் துரைசாமி அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது,அதில் பார்க்கவ கோத்திரத்து மிலாடுடையார் செம்பியன் மிலாடுடையார் என்ற மன்னர் பற்றிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தென்னார்க்காடு மாவட்டம் எலவானச்சூர் சிவன் கோவில் கல்வெட்டு,மற்றும் திருக்கோவில் வீரட்டானேஸ்வரர் கோவில் கல்வெட்டு.
முதலாம் ராஜேந்திர சோழரது ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட மேற்கண்ட இடங்களில் உள்ள கல்வெட்டுகளில் பார்க்கவ கோத்திரத்து ஆதவ வீமனை உத்தம சோழ மிலாடுடையான். என்ற மன்னன் இருந்ததான குறிப்புகள் காணப்படுகிறது
பார்க்கவ குலத்தாருக்கும் கள்ளர்,மறவர் இனத்திற்குமான ஒற்றுமை ஆதாரங்கள்:
கள்ளர்களுக்கும் பார்க்கவகுல சகோதர கூறுகள்:
இன்றைய பார்க்கவ குலத்தவர்கள் தஞ்சை கள்ளர்களின் உட்பிரிவினரே என்று வரலாற்று ஆய்வாளர் கூறுகின்றனர்.ஆனால் பார்க்கவர்கள் தனித்தே இயங்கு கின்றனர். பாரி மற்றும் மலையமான்களின் வம்சத்தினராகவே வரலாற்று ஆய்வுகள் இவர்களைக் கூறுகின்றன .தற்காலத்தே இவர்கள் பார்கவ குல மூப்பனார், பார்கவ குல உடையார் என்ற பட்டங்களுடன் வாழ்ந்து வருகின்றனர். மூப்பனார் என்பது ஜாதிப்பெயர் கிடையாது.இனத்தின் மூத்த குடியினர் எனப்பொருள்படும் .(மைசூர் உடையார்கள் வேறு இனத்தவர்கள்.) உடையார் என்பதின் உட்பிரிவு பட்டங்களே மூப்பனார்,நயினார்,என்பதாகு தஞ்சைக்.கள்ளர்குல அரசவம்சமாக பழங்காலம் முதலே அறியப்பட்டவர்களான பார்க்கவ குல மூப்பனார்,பார்க்கவ குல உடையார் என்ற சேதிராயர்களான பார்கவ குலத்தினர் மற்றும் தஞ்சைக்கள்ளர்களான சோழர்கள் இருவரைப்பற்றிய கல்வெட்டு இலக்கிய வரலாற்று ஆதாரங்கள் அனைத்துமே சோழர்கள் கள்ளர் மரபினரே என உறுதிப்படுத்துகின்றன. பார்க்கவ குலத்தாரின் பட்டங்கள் தஞ்சை கள்ளரில் சில: 1758 வாணாதிராயர் 762 வாணரையர் 1875 , 1765 வாண்டையார் முனையரையர்,1580 மலையமான் 1581 மலையராயர் ,கொங்கராயர்,சேதிராயன்,535 கிளிநாடர் 683 537 கிளியாண்டார், 390 க686 கத்தரியாளியார் 539 கிளிப்பாண்டார் 2342மிலாடுடையார்,1535 மலாடுடையார்,735 நத்தமான்,347உடையான், 1234சேதியராயன்,432வன்னிய நாயகன்,2342பண்டரையர், 454கோவலராயர்,786வாணகோவரையன்,138வாணராயர்6,வாணவிச்சாதிரன், 454காடவராயன்,(காடவர்களை ஆண்டவன்)612பல்லவராயர்,533அரையதேவன்,1487நாடாழ்வான்
இதைப்போல் பிரான்(மலை) கள்ளர்களும் பாரி மலையமான் இனமே:
தற்போது அழைக்கப்படும் பிரான்மலையை(இம்மலைப்பகுதியில் இருந்து தான் புகழ் பெற்ற பிறமலைக்கள்ளர் என்ற வகுப்பினரும் மதுரை நோக்கி வந்ததாக கூறப்படுகிறது).ஆண்ட பாரி மன்னனுக்கும் மலையமான் திருமுடிக்காரிக்கும் ஏற்பட்டுள்ள மணஉறவு வரலாறு கல்வெட்டில் உறுதி செய்து அறியப்பட்ட ஒரு சம்பவமாகும். வள்ளல் பாரி ஓரியக்குலத்தை சேர்ந்தவன். ஓரியர்=சக்கரவாள சக்கரவர்த்திகள்=நாகவம்சத்தினரின் தலைவர்கள்.பாரிவேள் இந்த வம்சத்தில் வந்தவன்.(உபரிசர வசு என்னும் சோழ மன்னனும் இவ்வம்சத்தவன்). நாகர்கள் என்று அழைக்கப்படும் மரபினரின் தலைவன். (விச்சாதரர்=வானவர்).கள்ளர் என்பார் வீரம் நிறைந்த நாகர்களே என்று கூறப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றத்தில் 13-ஆம் நூற்றாண்டு சுந்தரப்பாண்டியத்தேவன் கல்வெட்டுகளில் ஒருபாடிக்காப்போன் மழவராயர் என்பவரைப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. 'மழவர்' என்பது மலைக்கோவலராகியபிரமலைக்கள்ளரைக் குறிக்கும் பெயர் என்பது மீண்டும் இவ்விடத்து நினைத்தற்குரியதாகும். திருமலை நாயக்கர் காலத்திலும் திருப்பரங்குன்றம் கோயிலின் அறங்காவலர் உரிமை 'காரி பின்னத்தேவன்' என்பவருக்கு 'திருமலைக்காரி பின்னத்தேவன் என பட்டம்கட்டி அவருக்கே உரிமையும் செப்புப்பட்டயமும் தரப்பட்டுள்ளது. காரி பின்னத்தேவன் மலையமான் திருமுடிக்காரியின் மரபினரே: எனவே காரி பின்னத்தேவன் என்பவர் திருக்கோவிலூர் மலையமான்.திருமுடிக்காரியின் மரபில் பின் வந்தவன் என்று பொருள் கொள்கிறார்.இவர்களுக்கு முற்காலத்தில் மழவராயர் என்று பட்டம் இருந்துள்ளது.மலையமான்களின் நேரடி மரபு வழி வந்தோர் பாரியின் வம்சமான மலையமான் குலத்தார் மட்டுமே.இன்றைக்கும் சிய்யான்(ஸ்ரீஆயன்) என்ற சொல் வழக்கும் மாயாண்டி,மலைச்சாமி(மலையமான்) போன்ற பெயர்கள் பிரமலைக்கள்ளர் மரபுப் பெயராய்க் காணலாம். இவர்களைத்தான் திருப்பரங்குன்றம் கோயில் கல்வெட்டு மழவராயர் என குறிப்பிடுகின்றது. எனவே பிரமலைக்கள்ளர்கள் திருப்பரங்குன்றம் கோயிலில் பாண்டியனால் பாடிக்காப்போனாக நியமிக்கப்பட்ட 'மழவராயர்' என்ற சீர்மிகு மலையமான் வம்சத்தினரே.

Comments
Post a Comment