பார்க்கவகுல வரலாறு

பார்க்கவகுலம் என்ற சமூக இனக் குழு மக்களைப்பற்றிய பண்டையச் செய்திகளில் பார்க்கும் போது வேந்தர்களுக்கு அடுத்ததாக குறு நில மன்னர்களின் வரலாறு சொல்லப்படுகிறது.

வரலாற்றுத்தொகுப்பு

இந்த குறு நில மன்னர்களில் மலையமானின் இனமாக அறியப்படுபவர்கள் பார்க்கவ குலத்தவர்கள். கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரி மகள்களுக்கும் மலையமானுக்கும் உண்டான வழித் தோன்றல்கள் என்று கல்வெட்டுகள், பாடல்கள், செப்பேடுகள் போன்ற வரலாற்று சான்றுகள் உள்ளன. மறவர்(மழவர்), சேதியர், மலாடர்(மலைநாடர்) என்ற இனக்குழுவைச் சேர்ந்த இவர்கள் உடையார் சமூகம் எனப்படுவர்.

பட்டம்தொகு

உடையார் சாதியினரான இவர்களை வடதமிழகத்தில் குறிப்பாக கடலூர்போன்ற பகுதிகளில் நயினார் எனவும், தஞ்சை, திருச்சியிலிருந்துதென்பகுதிகளில் மூப்பனார் எனவும், திருக்கோவிலூர் போன்ற நடுநாட்டுப்பகுதிகளிலும், தெற்கே சில இடங்களிலும் உடையார் என்று அழைக்கப்படுகின்றனர். உடையார்கள் மலையமான், நத்தமான், சுருதிமான் (உடையார்,நயினார்,மூப்பனார்) என்ற பட்டம் கொண்டவர்கள் ஆவார்கள். இவர்களில் நத்தமான் பட்டம் கொண்ட மக்கள் தமிழகத்தின் சில பகுதிகளில் நயினார் பட்டம் கொண்டு அழைக்கப்படுகின்றனர். நத்தமான் நயினார்கள் சைவ உணவுப்பழக்கம் மேற்கொள்பவர்கள். மேலும் நத்தமான்,மலையமான் பட்டம் கொண்டவர்கள் எல்லா இடங்களிலும் உடையார்கள் என்று அழைக்கப்படுகின்றனர். சுருதிமான் பட்டம் உடையோர் பொதுவாக மூப்பனார் என்றும் அழைக்கப்படுவர். இவர்களின் மூதாதையர் ஆகிய மலையமான்களே நடுநாடு என்ற சேதிநாட்டுப்பகுதியை ஆட்சி செய்தவர்கள்.

Comments

Popular posts from this blog

பார்க்கவகுலம்

மலையமான் திருமுடிக்காரி