பார்க்கவகுலம்

பார்க்கவ குல உடையார்கள். (மலையமான் நத்தமான்,சுருதிமான்,உடையார்,நயினார், மூப்பனார்)
(பார்க்கவ குலம்) காரி வழிமுறையும் காசினியில் வேளிர் வேள்பாரி வழிமுறையும் பல்கற்கே நீருள்ளீர். ---கபிலர்
பார்க்கவ குல சத்திரியர்கள் (உடையார்,மூப்பனார்,நயினார்)
காரி வழிமுறையும் காசினியில் வேளிர்,வேள் பாரி வழிமுறையும் பல்கற்கே நீருள்ளீர்.--முது கபிலர்.


கோவற் கோமான் மலையமான் வம்சமாக ஆதாரப்பூர்வமாக வாலிகண்டபுரம் கல்வெட்டு ,வரஞ்சுரபுரம் கல்வெட்டு மேலும் திருச்செங்கோட்டில் ஐம்பது கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள்,16,17 ம் நூற்றாண்டைச் சேர்ந்த மோரூர் கல்வெட்டுகள் முதல் திருக்கோவிலூர் வீரட்டானம் கல்வெட்டு,உலகளந்த பெருமாள் கோவில் கல்வெட்டு வரை உறுதிசெய்யப்பட்டு அறியப்படுவோர் பார்கவ குல சத்திரியர்கள் மட்டுமே.

தென்னிந்திய அரச குலங்களில் மலையமான் குலமும் முக்கியமான ஒன்று. மூவேந்தரின் சதியால் ஏற்பட்ட பாரியின் மறைவிற்கு பின்,தந்தையை இழந்து நின்ற பாரிமகளிரை,புலவர் கபிலர் பெருமான் தனது முயற்சியின் மூலமாக  திருக்கோவிலூரையாண்ட மலையமான் தெய்வீகன் நரசிங்க உடையான் என்ற அரசனுக்கு சங்கவை,அங்கவை இருவரையும் மணம் செய்விக்க வேண்டி ,பாரியை சதியால் கொன்ற மூவேந்தரையுமே ஔவையாரின் உதவியுடன் அழைத்து, அவர்களின் முன்னிலையிலேயே பாரிமகளிருக்கும் மலையமான் தெய்வீகனுக்கும் திருமணம் செய்வித்தார்.
இவ்வாறு மூவேந்தர் முன்னிலையில் ஏற்பட்ட மண உறவின் காரணமாகவும், மூவேந்தரின் மக்களுடனும் உண்டான மண உறவின் காரணமாகவும் மலையமான் தெய்வீக ராஜனின் சந்ததியினர் பார்கவ குலம்,பாரியின் வம்சம் எனவும் அழைக்கப்படுகின்றனர்.
தெய்வீகராஜனின் சந்ததியினர் மலையமன்னர் நரசிங்க முனையரையர் ,நத்தமன்னர் மெய்ப்பொருள் நாயனார்,சுருதிமன்னர் குலசேகரன் என்ற மூவர். அதில் மலையை ஆட்சி செய்பவர் மலையமான் எனவும் சமதளத்தை ஆட்சி செய்தவர் நத்தமான் எனவும்,மண்ணும்,மலையும் ஆள்பவர் கல்வி,வீரம்  எல்லாவற்றிலும் சிறந்தவர் தேர்ந்தவர் சுருதிமான் எனவும் வழங்கப்பட்டார்கள். மேற்படி பட்டங்களைக்கொண்ட மலையமான்களாகிய தண்ணிழல் வாழ்நர் (சேர அரச குலத்தார்)என்று அழைக்கப்பட்ட இவர்களின் இனத்தார் பதினெட்டாம் நூற்றாண்டு வரைக்குமே மலையமன்னர்,நத்தமன்னர் என்ற குறுநிலமன்னர்களாக,பாளையக்காரர்களாக
நாட்டார், உடையார்,நயினார்,மூப்பனார்,கிழார்  என கிராம நிர்வாகிகளாக தலைவர்களாக இருந்தனர். அவர்களின் வம்சாவழியினர் இன்றைக்கும் அதே பட்டங்களுடனேயே அழைக்கப்படுகின்றனர்.
குல முதல்வராக குலசேகரன் சுருதிமன்னர் அறியப்படும் காரணத்தால் அவர்தம் வம்சத்தினர் மூப்பனார் ஆவார். குலசேகரன் சுருதிமானை,குலசேகர ஆழ்வாராகவே கருத வேண்டியுள்ளது. ஏனெனில் பார்க்கவ குலத்தில் சைவ மதத்தின் தாக்கம் பிற்காலத்தே  நயினார் என்றே பட்டம் கொள்ளும் அளவிற்கு மேலோங்கி நின்றதால் வைணவப் பற்றுடைய ஆழ்வார் குலசேகரருக்கு முக்கியத்துவம் தராமல் ஒதுக்கியுள்ளனர். தெய்வீகன் மலையமான் வம்சத்தோர் ஆண்டதாக செப்பேடு குறிப்பிடும் பகுதிகள் அனைத்தும் சேரமான் குலசேகர ஆழ்வார் ஆண்ட பகுதிகள். சுருதிமானின் வரலாறும் ஆழ்வாரின் வரலாறும் இருவரும் ஒன்றே என்று காட்டினாலும் வைணவப் பற்றுடையவர் என்ற உண்மையை மறைக்க வேண்டி செய்த பிசகு இன்றைக்கு பார்க்கவ குலத்தார் குலமுதல்வன்(சுருதிமான்) பற்றியே அறியப்படாமல் இருக்கின்றனர்.
மலையமான்களின் நேரடி மரபு வழி வந்தோர் பாரியின் வம்சமான பார்க்கவ குலத்தார் மட்டுமே. பார்கவ குலத்தோர் சோழனுக்கு பெண் கொடுக்கும் உயர் நிலையில் இருந்த அரச குடும்பத்தார்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூருக்கு அருகில் உள்ள
சோழ பாண்டியபுரம் என்ற ஊரில் ஆண்டிமலை என்ற இடத்தில் உள்ள பாறையில் கி.பி.953 ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட கல்வெட்டில் உள்ள செய்தி,

"பாரிமகளிரின் பைந்தொடி முன்கை பிடித்தோர் வழி வரு குரிசில் சித்தவடவன்"
என்பதாக அமைகிறது,பாரி மகளிரை மணம் செய்தவர்களின் வழி வந்த அரசன் சித்தவடவன் என்கிறது செய்தி.
இவரது மகளான வானவன் மாதேவி என்பவர் தான் தஞ்சையை ஆண்ட சுந்தர சோழனின் மனைவி, ராஜராஜ சோழனின் தாயார்.
 பாரியின் வம்சமாக கல்வெட்டு கூறும்
பாரிமகளிரின் பைந்தொடி முன்கை பிடித்தோர் வழி வரு வம்சத்தோர் இன்றைக்கும் என்றைக்கும்
பார்கவ குல சத்திரியர்கள் மட்டுமே.
மேலும் “
தெய்வக்கவிதைச்செஞ்சொற்கபிலன் மூரிவண்தடக்கை பாரிதனடைக்கலப்
பெண்ணைமலையற் குதவிப்பெண்ணை அலைபுனல்அழுவத்து அந்தரிட்சம்செல மினல்புகும்விசும்பின் வீடுபேறெண்ணி கனல்புகும் கபிலக்கல்லது*.
” –என இராசராச சோழன் கல்வெட்டும் மலையமான் பாரி வம்ச உறவினை மெய்ப்படுத்தும் கல்வெட்டு மூலமும் இவ்விரு வேளிர் வம்சமாக என்றைக்கும் அறியப்படுபவர்கள் பார்கவ குல சத்திரியர்கள்.
நத்தமான் மலையமான் சுருதிமான் பற்றிய கல்வெட்டுகளில் பார்க்கவ கோத்திரம் என்றும் யாதவ குலம் யது வம்சம் என்றும் காணப்படுகிிிற .
து

Comments

Popular posts from this blog

பார்க்கவகுல வரலாறு

மலையமான் திருமுடிக்காரி