மலையமான் என்னும் மன்னிய சேர குலத்தோன்றல் 1
(பார்க்கவ குலம்) காரி வழிமுறையும் காசினியில் வேளிர் வேள்பாரி வழிமுறையும் பல்கற்கே நீருள்ளீர். ---கபிலர்
மலையமான் என்னும் மன்னிய சேர குலத்தோன்றல்-2
மாட்சி மிகு சேர மலையரின் நேரடி வழித்தோன்றல்கள் யார்?
மூவேந்தரின் சதியால் ஏற்பட்ட பாரியின் மறைவிற்கு பின்,தந்தையை இழந்து நின்ற பாரிமகளிரை,புலவர் கபிலர் பெருமான் தனது முயற்சியின் மூலமாக மலையமான் திருக்கோவிலூரையாண்ட மலையமான் தெய்வீகன் என்ற அரசனுக்கு சங்கவை,அங்கவை இருவரையும் மணம் செய்விக்க முனைந்து;பாரியை சதியால் கொன்ற மூவேந்தரையுமே ஔவையாரின் உதவியுடன் அழைத்து, அவர்களின் முன்னிலையிலேயே பாரிமகளிருக்கும் மலையமான் தெய்வீகனுக்கும் திருமணம் செய்வித்தார். இவ்வாறு மூவேந்தர் முன்னிலையில் ஏற்பட்ட மண உறவின் காரணமாகவும், மூவேந்தரின் மக்களுடனும் உண்டான மண உறவின் காரணமாகவும் மலையமான் தெய்வீக ராஜனின் சந்ததியினர் பார்கவ குலம்,பாரியின் வம்சம் எனவும் அழைக்கப்படுகின்றனர்.தெய்வீகராஜனின் மக்கள் மலையமன்னர் நரசிங்க முனையரையர் ,நத்தமன்னர் மெய்ப்பொருள் நாயனார்,சுருதிமன்னர் குலசேகரன் என்ற மூவர்.அதில் மலையை ஆட்சி செய்பவர் மலையமான் எனவும் சமதளத்தை ஆட்சி செய்தவர் நத்தமான் எனவும்,மண்ணும்,மலையும் ஆள்பவர்,கல்வி,கேள்விகளில் தேர்ந்தவர் சுருதிமான் எனவும் வழங்கப்பட்டார்கள்.மேற்படி பட்டங்களைக்கொண்ட மலையமான்களாகிய தண்ணிழல் வாழ்நர் (சேர அரச குலத்தார்)என்று அழைக்கப்பட்ட இவர்களின் இனத்தார் பதினெட்டாம் நூற்றாண்டு வரைக்குமே மலையமன்னர்,நத்தமன்னர் என்ற குறுநிலமன்னர்களாக,பாளையக்காரர்களாக நாட்டார், உடையார்,நயினார்,மூப்பனார் என கிராம நிர்வாகிகளாக தலைவர்களாக இருந்தனர். அவர்களின் வம்சாவழியினர் இன்றைக்கும் அதே பட்டங்களுடனேயே அழைக்கப்படுகின்றனர். குல முதல்வராக குலசேகரன் சுருதிமன்னர் அறியப்படும் காரணத்தால் அவர்தம் வம்சத்தினர் மூப்பனார் ஆவார்.குலசேகரன் சுருதிமானை,குலசேகர ஆழ்வாராகவே கருத வேண்டியுள்ளது. மலையமான்களின் நேரடி மரபு வழி வந்தோர் பாரியின் வம்சமான பார்க்கவ குலத்தார் மட்டுமே.
இதை அன்றைய ஆங்கிலே அரசும் தென்-இந்திய சாதிகளை ஆராய்ந்த எட்கர் தர்ஸ்டனும் பார்க்கவ குல உடையார்களே சேரர் வழித்தோன்றல்கள் என அறிவித்துள்ளனர்.
Tradition traces the descent of the udayans from a certain Deva Raja, a Chera king, who had three wives, by each of whom he had a son, and these were the ancestors of the three castes(Nattamaan,sudermaan,malaiyamaan). There are other stories, but all agree in ascribing the origin of the castes to a single progenitor of the Chera dynasty. It seems probable that they are descendants of the Vedar soldiers of the Kongu country, who were induced to settle in the eastern districts of the Chera kingdom.-udayans- Edgar Thurston. Castes and tribes of southern India (Volume 7)
சேரனின் நேரடி வாரிசாகவும்,சோழர்களின் கிளைக்குடியாகவும் உள்ள மலையர் குல அரச குடும்பமாகிய இவர்களுக்கு இரண்டாயிரம் வருடத்திற்கு முற்பட்ட பாரம்பரியம் உண்டு.மலையமான் வம்சத்தவர்கள் சூரிய குலமாக அறியப்படுகின்றனர்.
சோழரின் கிளை குலத்தவர்களும் பார்க்கவர்கள் தான்.
பார்கவ குலத்தோர் சோழனுக்கு பெண் கொடுக்கும் உயர் நிலையில் இருந்த அரச குடும்பத்தார். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூருக்கு அருகில் உள்ள சோழ பாண்டியபுரம் என்ற ஊரில் ஆண்டிமலை என்ற இடத்தில் உள்ள பாறையில் கி.பி.953 ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட கல்வெட்டில் உள்ள செய்தி, "பாரிமகளிரின் பைந்தொடி முன்கை பிடித்தோர் வழி வரு குரிசில் சித்தவடவன்" என்பதாக அமைகிறது,பாரி மகளிரை மணம் செய்தவர்களின் வழி வந்த அரசன் சித்தவடவன் என்கிறது செய்தி. இவரது மகளான வானவன் மாதேவி என்பவர் தான் தஞ்சையை ஆண்ட சுந்தர சோழனின் மனைவி,ராஜராஜ சோழனின் தாயார். என்றைக்கும் பாரியின் வம்சமாக கல்வெட்டு கூறும் பாரிமகளிரின் பைந்தொடி முன்கை பிடித்தோர் வழி வரு வம்சத்தோர் பார்கவ குல சத்திரியர்கள் மட்டுமே. மேலும் “ தெய்வக்கவிதைச்செஞ்சொற்கபிலன் மூரிவண்தடக்கை பாரிதனடைக்கலப் பெண்ணைமலையற் குதவிப்பெண்ணை அலைபுனல்அழுவத்து அந்தரிட்சம்செல மினல்புகும்விசும்பின் வீடுபேறெண்ணி கனல்புகும் கபிலக்கல்லது*. ” –என இராசராச சோழன் கல்வெட்டும் மலையமான் பாரி வம்ச உறவினை மெய்ப்படுத்தும் கல்வெட்டு மூலமும் இவ்விரு வேளிர் வம்சமாக அறியப்படுபவர்கள் பார்கவ குல சத்திரியர்கள் மட்டுமே.. சுந்தர சோழன் இறந்தவுடன் அவரோடு சேர்ந்து உடன்கட்டை ஏறியவர் பார்கவ குல மலையமானின் மகளான வானவன் மாதேவி.க்ஷத்ரியப்பெண்கள் மட்டுமே உடன் கட்டை ஏறுதல் வழக்கம்.
Comments
Post a Comment