பார்க்கவகுல வரலாற்று பதிவுகள்
வன்னிய குலத்திலும் பார்கவ குலத்திலும் ஒரே பட்டம் கொண்ட குடும்பத்தார் சிலர் உள்ளனர் என்பதை விளக்குகிறது 18ம் நூற்றாண்டைச்சேர்ந்த கிருஷ்ணாபுரம் செப்பேடு.இதன் மூலம் பார்கவ குலத்தார் வன்னியப்பட்டமும் கொண்டுள்ளனர் என்று தெரிகிறது.
சுருதிமான் மூப்பனார்கள் கத்திக்காரர்கள்(கத்திரியர்) என்ற மெய்க்காப்பாளர் பட்டம் பெற்றவர்கள் இவர்கள் ராஜராஜனின் காந்தளூர் சாலைப்படை எடுப்பின் போது அவரோடு கேரளம் சென்று போரிட்டவர்கள். காந்தளூர் சாலையை வேரறுத்த ராஜராஜன் மீண்டும் அங்கு கேரளர்கள் தலை தூக்காதவாறு அடக்கி வைக்க இவர்களை அங்கு இருக்குமாறு வைத்து விட்டு தஞ்சைக்கு வந்துள்ளார். அவ்வாறு அங்கே குடியேறிய பார்கவ குல மலையமான்களின் வாரிசுகள் இன்றைக்கும் திருநெல்வேலி,கன்னியாகுமரி,ராம்நாடு,மதுரை போன்ற பகுதிகளில் வாழ்கின்றனர்.அவர்களை இன்றைக்கும் அவ்விடங்களில் கத்திக்கார மூப்பனார்கள் என்று அழைப்பதைக் காணலாம். சுருதிமான்கள் பதினாறாம் நூற்றாண்டு வரை சோழ நாட்டின் மறவர்களாக,தளபதிகளாக,குறுநில மன்னர்களாக இருந்துள்ளார்கள் என்பதை சுருதிமான்களைப்பற்றிய கல்வெட்டுக்கள் மூலம் அறியலாம்.அரைய தேவன்,நாடாழ்வான்,வாணகோவரையன்,வாணராயன்,வாணவிச்சாதரன்,தேவன்,இருங்கோவேளர்,முத்தரையன் என்ற பட்டங்களும் மூப்பனார்களுக்கு(சுருதிமான்) இருந்துள்ளது.
பாளையக்காரர்,,பாளையத்தார்,(பாளையங்களின் மன்னர்கள்) காவல்காரர்(ஊர்க்காவல் பணி) பண்டாரத்தார்,பண்டாரியார்(கருவூல அதிகாரி) உடையார்(அரசர்),மலையமன்னர்,நத்தமன்னர்,சீமை நாட்டார்,சில்லரை கிராமத்து நாட்டார்,மூப்பனார்(கிழார்),நயினார் (நாயன்மார் சைவ மதம் தழுவியவர்கள்) என்று பல வகையான அதிகார பட்டங்களைக்கொண்டு ஆட்சி செய்தவர்கள் பார்க்கவ குல க்ஷத்திரியர்கள்.
பாடம் கற்கும் குல குருவின் பெயரை கோத்திரமாக கூறிக்கொள்ளும் மரபு பிராமணர்,வைசியர் மற்றும் சத்திரியரிடையே மட்டுமே காணப்படுகிறது.
எடுத்துக்காட்டாக பல்லவர்கள் தம்மை பரத்வாஜ கோத்திரமாக கூறிக்கொண்டனர்.
அதே போல பிருகு வம்ச பார்க்கவராகிய சுக்கிராச்சார்யரை குல குருவாக கொண்ட(மாபலி)சேர மன்னரின் வழிவந்த மலையமான் குலத்தவரான இவர்களும் சத்திரிய மரபுப்படி பார்க்கவ கோத்திரமாக கூறிக்கொள்கின்றனர்.
சேரனின் நேரடி வாரிசாகவும்,சோழர்களின் கிளைக்குடியாகவும் உள்ள மலையர் குல அரச குடும்பமாகிய இவர்களுக்கு இரண்டாயிரம் வருடத்திற்கு முற்பட்ட பாரம்பரியம் உண்டு.புறநானூற்றில் இவர் மரபோர்க்கு அநேக பாடல்களும் உண்டு.
இவர்கள் முதுகுடி அரச மரபினர் என உணர்த்தும் விதமாக,காரியின் மக்களை கிள்ளிவளவனிடமிருந்து காக்கும் பொருட்டு புலவர் பாடுகையில் சோழனின் குடிப்பெருமைகளை கூறி இவர்களும் உன்போன்றே பெருமை கொண்ட தமது பகுத்து உண்ணும் தண் நிழல் வாழ்நர் குடி (வேளிர் குல அரச குடி) எனக்கூறும் புறநானூற்றுபாடல் உள்ளது.
இரண்டாயிர வருடத்திற்கும் மேற்பட்ட பாரம்பரியம் கொண்ட இவர்கள் பதினைந்தாம் நூற்றாண்டிலேயே வடமொழி ஆதிக்கத்தால் அரச குடி வீரர்கள் கத்திரியர் என்ற தமிழ் சொல்லின் அர்த்தப்படும்படி பார்கவ குல சத்ரியர் என அறிவித்துள்ளனர்..சில அறிவாளிகள் கூறுவது போல மலையமான் நாட்டு மக்கள் அனைவரும் மலையமான்,சுருதிமான் என்று கூறிக்கொண்டால் ஐம்பது லட்சம் மனிதர்களாவது பார்க்கவ குலம் என்று அறியப்படுவார்கள் மற்றும் மலையமான் நாட்டில் வேறு சாதிகளே காணப்படாது.
பார்க்கவ குலத்தவரே மலையமானின் வம்சத்தவர்கள் என்று ஆதாரங்கள் அநேகம் உண்டு. அதனை மாற்றவே முடியாது.
மலையமான் குலமான இவர்கள் தற்போதும் சில லட்சம் பேர்களே உள்ளனர். இவர்களை ஜாதி அமைப்பு என்பதைக்காட்டிலும் தமிழ் நாட்டில் தற்போதும் உள்ள மலையமான் வம்சத்தின் யது குல பார்கவ கோத்திர க்ஷத்ரியக் குடும்பமாக கூறுவதே முறையானது

Comments
Post a Comment