பார்க்கவகுல வரலாறு
பண்டைய காலச் செய்திகளைப் பார்ககும் போது வேந்தர்களுக்கு அடுத்ததாக சொல்லப்படும் குறு நில மன்னர்கள் வரிசையில் உள்ள வேளிர் சமூகத்தை சேர்ந்த கடையேழு வள்ளலகளில் ஒருவரான பாரி மகள்களுக்கும் மலையமானுக்கும் உண்டான வழித் தோன்றல்கள் என்று கல்வெட்டுகள்,பாடல்கள்,செப்பேடுகள் போன்ற வரலாற்று சான்றுகள் உள்ளன.கொங்குவேட்டுவ மறவர்(மழவர்),சேதியர்,மலாடர்(மலைநாடர்) என்ற இனக்குழுவைச் சேர்ந்த இவர்கள் மலையமான்,நத்தமான்,சுருதிமான் (உடையார்,நயினார்,மூப்பனார்)என்ற பட்டம் கொண்டவர்கள்.இவர்களில் மலையமான்,சுருதிமான் ஆகிய பட்டம் கொண்ட மக்கள் தமிழகத்தின் சில பகுதிகளில் சிறப்பாக நயினார் பட்டம் கொண்டு அழைக்கப்படுகின்றனர்.நத்தமான்,மலையமான் பட்டம் கொண்டவர்கள் எல்லா இடங்களிலும் உடையார்கள் என்று வழங்கப்படுவார்கள்.சுருதிமான் பட்டம் உடையோர் பொதுவாக மூப்பனார் என்றும் அழைக்கப்படுவர்.எட்கர் தர்ஸ்டன் தென்னிந்திய குலங்கள் என்ற நூலில் உடையார் சமூகம் என்று(உடையார்,நயினார்,மூப்பனார்) இம்மூவரையும் குறிப்பிட்டுள்ளார். வேளிர் சமூகமாகிய இவர்களின் மூதாதையர் ஆகிய மலையமான்களே திருக்கோவலூர்ப் பகுதியை ஆட்சி செய்தவர்கள்.
நன்றி
அதிபதி வின்சென்ட்
மாமன்னர் பாரி வள்ளல் வம்சத்தார்
நன்றி
அதிபதி வின்சென்ட்
மாமன்னர் பாரி வள்ளல் வம்சத்தார்
Comments
Post a Comment