பார்க்கவகுல வரலாற்று பதிவுகள்

பார்க்கவ குல மூப்பனார் என்னும் சுருதிமான்களின் கல்வெட்டுகளும் வரலாறும்.
அரியலூர் மாவட்டம்-பெரம்பலூரில் கி.பி 1226 இல் எழுதியுள்ள சுருதிமான் பற்றிய கல்வெட்டு செய்தி.
அரியலூர் மாவட்டம்,பெரம்பலூர் வட்டம்,கொளக்காநத்தம் ஊரில் குமரவேல் ஆசிரியர் வீட்டுப் படிக்கல் காலம் - கி.பி. 1226 மூன்றாம் இராஜராஜன்-ஆட்சியாண்டு.10 காலத்தையக் கல்வெட்டு
..ஸ்வஸ்திஸ்ரீ இராஜராஜதேவற்கு யாண்டு10வது இத் தாம்பு செய்வித்தான் ஊற்றதூருடையான் சுருதிமான் சனனாதர் அரைய தேவநான வாண விச்சாதிர நாடாழ்வான்.
சுருதிமான் என்பது மலையமானின் வம்சம்.
ஊட்டத்தூர் என்பது திருச்சிக்கு அருகில் உள்ளது.சுருதிமான்கள் ஆதியிலிருந்தே தஞ்சையிலிருந்து..திருச்சி வரைக்கும் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர்.இன்றைக்கும் இவ்விடங்களில் சுருதிமான்கள் பெரும்பான்மையாக வாழ்ந்தும் வருகின்றனர்.தமிழக ஜாதிப்பட்டியலில் பார்க்கவ குலத்தைத் தவிர எவருக்கும் சுருதிமான் மலையமான் நத்தமான் பட்டங்களும் கிடையாது.
மூப்பனார் என்ற பட்டம் கொண்டோரெல்லாம் சுருதிமான்களும் அல்ல.
மேலே காணும் கல்வெட்டு பட்டவர்த்தனமாக சுருதிமான் என்ற இனப்பெயரையே கொண்டுள்ளது.
பார்க்கவ குல மூப்பனார்கள் ஆகிய சுருதிமான்கள் வேளிரில் இருங்கோவேள் குலத்தவர்கள்.
நாடாழ்வான் =நாடு + ஆழ் + வ் + ஆன்
நாடாழ்வான் அரசன் என்ற பொருளில் கூறப்படும் பட்டம்..
இது எந்த ஒரு சமூகத்தையும் குறிப்பிட்டுக் கூறும் பட்டம் அல்ல.
அரையன்=அரசன் என்று பொருளாகும்.
யானைப்படைத்தளபதி சுருதிமான் நக்கன் சந்திரன்:
கி.பி.1007ல் சோழன் முதலாம் ராஜேந்திரனுக்கும் மேலைச்சாளுக்கிய மன்னன் இரிவபதுங்க சத்தியராய் என்பவனுக்கும் நடந்த போரில் ராஜேந்திர சோழரின் யானைப் படையை தலைமை ஏற்று நடத்தியவன்
சுருதிமான் நக்கன் சந்திரன் ஆவான்.இந்த படைத்தலைவன் நினைவாக ராஜேந்திர சோழன் ஊட்டத்தூர் கோவிலுக்கு நிவந்தம் அளித்தார். என்ற குறிப்பு காணப்படுகிறது.ஆதாரம் (S.R.Balasubramaniam Middle Chola temple page 257)
சுருதிமான்கள் போர்ப்படைத் தளபதியாக,அதிகாரிகளாக,குறுநில மன்னர்களாக,இருந்தமைக்கு அநேக சான்றுகள் உண்டு.இவர்களே
கத்திக்காரர்கள்,சவளக்காரர்கள் போன்ற சேதியர் என்னும் போர் மறவர்களாகவும் இருந்தவர்கள்.
காந்தளூர்ச் சாலை படையெடுப்பும் சுருதிமான்களும்.
உடையார் ராஜராஜ சோழரின் நான்காம் ஆட்சியாண்டில் கி.பி.988ம் வருடம் திருவனந்தபுரத்தின் ஒரு பகுதியான காந்தளூர்ச்சாலை என்னும் இடத்தின் மீது படையெடுத்து அழித்துள்ளார் என அவரது மெய்க்கீர்த்தி மூலம் அறிய முடிகிறது.இதற்கு காரணமாக கூறப்படும் வரலாறு......
திருவிதாங்கூர் அரசை அப்போது பாஸ்கர ரவிவர்மன் என்ற சேர மன்னன் ஆண்டு வந்துள்ளான்.
உடையார் ராஜராஜனின் தூதாக சென்ற தூதுவனை பாஸ்கர ரவிவர்மன் உதயகிரிக்கோட்டையில் உள்ள சிறையிலும் அடைத்து விடுகின்றான்.
இதனால் கடுங்கோபம் கொண்ட உடையார் ராஜராஜன் தனது பகைவரான சேரர்களின் பலம் வாய்ந்த துறைமுகமாகவும்,போர்ப்பயிற்சிகள் அளிக்கும் வலிய சாலையாகவும்,கடற்படையின் மூலத்தளமாகவும் விளங்கும் காந்தளூர்ச்சாலையை அழித்து சேரனின் கொட்டம் அடக்கவும் முடிவெடுத்து தனது கடற்படையை குமரி வழியாக அனுப்பிவிட்டு பெரும் படையுடன் பாண்டிய நாடு வழியாக சென்றார்.
அப்போது சேரனின் நண்பரான பாண்டியன் அமரபுஜங்கன் சோழனை எதிர்க்க அவரையும் புறமுதுகிட்டு ஓடச்செய்த சோழன் ராஜராஜன் கடற்கரைப்பட்டினமான காந்தளூர்ச்சாலையை அழித்து நிர்மூலமாக்கி அங்கு வலியசாலையில் அளிக்கப்பட்ட போர்ப்பயிற்சிகள்,கடற்படை செயல் பாட்டுத்தளங்கள்,தாந்த்ரீக வழிபாடுகள் இவற்றை அழித்து தடை செய்து, மீண்டும் அச்செயல்பாடுகள் தலை தூக்காதவாறு தனது நம்பிக்கைக்கு உரிய தளபதிகளையும் படை வீரர்களையும் அங்கேயே குடியேற்றியுள்ளார்.
இதனையே களம் அழித்து.... அருளி என்ற சொற்றொடர் குறிக்கிறது......
அவ்வாறு நடைபெற்ற போருக்கு ராஜராஜனுடன் சென்ற பார்க்கவ குல சேதியர்களான சுருதிமான்கள் கத்திக்காரர்கள்(கத்திரியர்),சவளக்காரர்கள் போன்ற படைவீரர்கள் (படையாட்சி) அங்கு மீண்டும் அச்செயல்கள் தலை தூக்காத படி கண்காணிக்க வேண்டி குடியேற்றப்பட்டனர்.
அவர்களில் சவளக்காரர் சிலர் பின்னாளில் பரதவர் போன்ற இனக்குழுக்களோடு கலந்து தனியே வாழ்வதாகவும் கூறப்படுகிறது.
அவ்வாறு அன்றைய திருவிதாங்கூர் நாட்டைச்சேர்ந்த கன்னியாகுமரி,தூத்துக்குடி,திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் குடியேறிய கத்திக்காரர்,சவளக்காரர் போன்றோர் அவ்விடங்களில் பார்க்கவ குல மூப்பனார் என்ற பட்டங்களோடும் வாழ்ந்து வருகின்றனர்.
திருப்பட்டூர்க் கல்வெட்டு.
நெற்குளம் என்ற ஊரில் பெரும் ஜமீனாக இருந்த சுருதிமான் சொர்ண வேந்தனான லங்கேசுவரன் என்பவர் தனது நிலங்களை விற்பது சம்பந்தமான செய்தியை திருப்பட்டூர் கல்வெட்டு தெரிவிக்கின்றது.மேலும் ஊட்டத்தூர் கல்வெட்டுகள் பெரும்பாலான சுருதிமான்களைப் பற்றிய செய்திகளைத் தெரிவிக்கிறது.

Comments

Popular posts from this blog

பார்க்கவகுலம்

பார்க்கவகுல வரலாறு

மலையமான் திருமுடிக்காரி