பார்க்கவகுல வரலாற்று சுவடுகள்
சேரமான் பெருமாள் குலசேகரஆழ்வார் அவர்களின் நேரடி வம்சமுமாக மூப்பனார் சுருதிமான் என்றும் அறியப்பட்டவர்கள்.மலையர்,வானவர்,வில்லவர் என்று சேரனுக்கான பட்டங்களைஉடையவர்கள்.,மலையமான்கள்,சுருதிமான்கள்,ஓய்மான்கள்,முனையரையர்கள்,முனையத்தரையர்கள்,மலையராயர்கள்,மலையரையர், மலையன் என்ற பட்டங்களையும் பெற்றவர்கள்.சேரனின் வம்சமானதால் அக்னி குல க்ஷத்ரியராகவும்,சோழனின் கிளை வம்சமானதால்
ஆதித்த குல க்ஷத்ரியர்களாகவும்,வேளிர்களே குடி வேந்தர் என்ற முறையில் யது குல க்ஷத்திரியர்களாகவும் பாண்டியனோடு அநேக மணஉறவுகளின் மூலமாக சந்திரவம்சமாகவும் மூவேந்தரோடும் தொடர்பும் இரத்த பந்தமும் உள்ள அரச வம்சமானவர்கள் பார்கவகுலத்தோர்.
சேதிநாடுஎன்ற நடுநாடு,மலைநாடு,கோவலூர்,திருகோவலூர்,ஓய்மாநாடு, கிழியூர்,முனையூர்,மலாடு,திருமுனைப்பாடி, போன்ற சேதிநாட்டு பகுதிகளை இரண்டாயிரம்வருடங்களுக்கும் மேலாகசுருதிமான்,மலையமான்,நத்தமான்,என்னும்
குடிப்பெயருடனும்,சேதிநாட்டை ஆள்பவர்கள் என்பதால் சேதிராயர்கள்
என்ற பட்டங்களுடனும் ஆண்ட இனத்தவர்கள் என கல்வெட்டு
ஆதாரங்களும்,சங்ககால புறநானூற்றுபாடல்களும் தெரிவிக்கின்றன.
இக்குழுவினர் தங்களை கல்வெட்டுக்களில் பார்கவ குல சத்ரியர்கள்
என்றே பதிவு செய்துள்ளனர்.அவர்களின் வம்சத்தினரும் அவ்வாறே
அழைக்கப்படுகின்றனர்.இவர்கள் சோழனுக்கு பெண் கொடுக்கும்
அளவிற்கு மேன்மையும்,தகுதியும் பெற்றவர்களாகஇருந்தனர்.
சுந்தரசோழனின் மனைவியும்ராஜராஜ சோழனின் தாயாருமான வானவன்மாதேவி என்பவர்திருக்கோவிலூர் மலையமான் சித்தவடவன் என்பவரின் மகளாவார்.சோழ வம்சம் பார்கவ குலத்தோடு நெருங்கிய தொடர்புடையது எனவரலாற்றுஆய்வாளர்கள் இவ்விதமான ஆதாரங்களால் உறுதிசெய்துள்ளனர்.மேலும் இரண்டாம்ராஜராஜனுடைய மனைவி அவனிமுழுதுடையாள் என்பவரும் மலையமான் மகளேயாவார்கள்.மலையன்,மலையமான்திருமுடிக்காரி,தேர்வண்மலையன்,சோழியஏனாதிதிருக்கண்ணன்,தெய்வீகன்,போன்றோர் புறநானூற்றில் பாடல்கள் பலபெற்ற சங்க கால மன்னர்கள்.
சேரமான் குலசேகரஆழ்வார் குல முதல்வராக சுருதிமானாக குல மூப்பனாராக விளங்குபவர்,மெய்பொருள்நாயனார்,நரசிங்கமுனையரையர்,போன்றோர் இக்குலத்தில் தோன்றியவர்கள்.
மாமன்னன் ராஜராஜசோழனும் இக்குலமரபினனே ஆவார்.அரச வம்சமாக
அறியப்பட்ட பதினாறு பட்டங்களில் மலையமான்கள்,ஓய்மான்கள் மற்றும் சேதிராயர்கள் போன்றபட்டப்பெயருடன் ஆண்டவர்கள்
,பிறமலை என்றெல்லாம் தற்போது
அழைக்கப்படும் பிரான்மலையை(ஆண்ட பாரி மன்னனுக்கும் மலையமான்
திருமுடிக்காரிக்கும் ஏற்பட்டுள்ள மணஉறவு வரலாறு கல்வெட்டில்
உறுதி செய்து அறியப்பட்ட ஒரு சம்பவமாகும்.
எவ்வி வேளின் வம்சத்தோன் பாரி.அத்தகைய குடிப்பிறந்த பாரி வீரத்திலும் கொடையிலும் புகழ் ஓங்கியவன்.
மேலும் அவனது பறம்புமலையும்,அதைச்சுற்றியுள்ள முன்னூறு ஊர்களும்
மூவேந்தர்களின் எல்லைகளையும் தொட்டிருந்தது.இதனாலேயே பாரியிடம்
மூவேந்தரும் பெண் கேட்டிருக்கலாம்.பாரிபெண் தர மறுத்ததின் விளைவாக அவன் மீது போர்தொடுக்க மூவேந்தரும் ஒன்றுகூடி
போரிட்டும் அவனை வெல்ல இயலாது போகவே சூழ்ச்சியினால்
அவனைக்கொன்றதாக கபிலரின் பாடல்களின் மூலமாக அறிய முடிகிறது.
பாரியின் பெண்கள் அங்கவை,சங்கவை இருவரும் புலவர் கபிலர்
பொறுப்பில் இருந்தனர்.அவர் அவர்களை இறுதியாக பாரியைபோன்றே
இனத்திலும் வீரத்திலும் கொடையிலும் இணையான முள்ளூர் மலைநாட்டு கள்ளர் மலையமான்திருமுடிக்காரியின் மகன்தேர்வன் மலையனுக்கு மணமுடித்துகொடுத்ததாக கல்வெட்டு ஆதாரங்கள் மூலம் அறியப்படுகிறது.எனவே பாரியின் வம்சமாகவும் பார்கவ குலத்தார்
கூறிக்கொள்வதும் அதற்கான சான்றுகளும் தெளிவாகவே உள்ளன.பாரி மற்றும் மலையமான்களின் வம்சத்தினராகவே வரலாற்றுஆய்வுகள் கூறுகின்றன ஓரியின் வம்சத்தினரும் இவர்களே என்று சில வெளிநாட்டு கல்வெட்டுஆய்வாளர்கள் உறுதிசெய்துள்ளனர்.பாரி,காரி,ஓரி மூன்று வள்ளல்களின் வம்சத்தாரான இவர்கள் பார்கவ குல மூப்பனார்,பார்கவ குல உடையார் என்ற பட்டங்களுடன்வாழ்ந்துவருகின்றனர்.திருநெல்வேலி,கன்னியாகுமரி,மதுரை,ராமநாதபுரம் பகுதிகளில் சோழ பாண்டியர்களின் படையினராக வாழ்ந்த கத்தி மறவர்கள் என்னும் பெரும் வீரக்குழுவினரே அப்பகுதிகளில் தற்போதும் வாழ்ந்து வரும் பார்க்கவ குல மூப்பனார் என்ற கத்திக்கார மறவர்கள் ஆவார்கள்.வெள்ளையர்களின் அடக்குமுறையால் ஒடுக்கப்பட்டு போருக்கு பயன்படுத்தி நசுக்கப்பட்ட பிறகு தம்மை வெளிப்படுத்த இயலாத சூழலுக்கு ஆட்படுத்தப்பட்ட வீர மறவர்களே க்ஷத்திரிய பட்டம் மறைத்து சாதாரணமாக வாழப்பழகிய தொல்குடி மறவர்கள் பார்கவ குலத்தினர்.
மூப்பனார் என்பது ஜாதிப்பெயர் கிடையாது.இனத்தின் மூத்த குடியினர் தலைமையாளர் எனப்பொருள்படும்.(மைசூர் உடையார்கள் வேறு இனத்தவர்கள்.)உடையார் என்பதின் உட்பிரிவு பட்டங்களே.

Comments
Post a Comment