மலையமான் என்னும் மன்னிய சேர குலத்தோன்றல்-2
இன்றைக்கும் நத்தமான்,சுருதிமான்,மலையமான் பரம்பரையினர் பார்க்கவ குல க்ஷத்ரியர் என்று அழைக்கப்படுகின்றனர்.சோழனின் கிளைக்குடியாகவும் பார்க்கவ குலத்தார் வரலாற்றாளர்களால் கூறப்படுகின்றனர்.ஆனால் பெரும்பாலும் இவர்கள் தனித்தே பார்கவ குல க்ஷத்ரியர் என இயங்குகின்றனர்.சோழர்களில் சுந்தர சோழனுக்கும் இரண்டாம் ராஜராஜனுக்கும்(மலையமான் மகள் அவனிமுழுதுடையாள்)பெண் கொடுத்த இவர்கள் மூவேந்தரோடும்,வேளிர்களோடு மண உறவு கொண்டுள்ளனர்.பார்கவ குலத்தார் வானவன்,சேரன்,மலையன் என்னும் குடிப்பெயருடைய மலையமான்களின் நேரடி வம்சத்தாராகவும் பாரி மற்றும் மூவேந்தரின் பெண்ணடி வாரிசாகவும் உள்ள குடும்பத்தினர்கள். .
கரிகாலச்சோழன் காலத்திலிருந்தே மலையமானும் சோழனும் உறவினர் ஆவார்கள்: .
உடையார் ராஜராஜ சோழத்தேவர் என்ற பெயரில் உள்ள உடையார் என்ற பட்டம் ராஜராஜனின் தாய் வழிப்பட்டம் என்றும் வேறு எந்த சோழனுக்கும் உடையார் பட்டம் கிடையாது,என்று கூறுபவர்கள் உணரட்டும்,கண்டராதித்த சோழன் தொண்டை மானாற்று துஞ்சின உடையார்,ஆனை மேற்றுஞ்சின உடையார் என்று குறிப்பிடப்பட்டுள்ளார். கண்டராதித்தனின் மனைவி செம்பியன் மாதேவியார் மலைநாட்டு மழவராயர் மகள்.மழவர்=மலவர்(மலையர்).
கரிகாலனும் மலையமான் மன்னவனும்.
அபிதான சிந்தாமணி என்னும் நூலில் கரிகாலனும் மலையமானும் நண்பர்கள் என்று கூறியுள்ளது. கரிகாலன் சிறுவனாய் இருந்தபோது அவனது உறவினர்கள் அரியணைக்கு போட்டியிட்டு அதற்கு உரிமையான கரிகாலனை பொய் வழக்கிட்டு சிறையில் அடைத்தனர்.சிறையிலிருந்து தப்பிய கரிகாலன் மலையமான் பாதுகாப்பில் தான் வளர்ந்துள்ளார். கரிகாலன் தந்தை இளஞ்சேட் சென்னி வடுகரை வென்று பாழி அரணை அழிக்க மலையமான் பெரும் படைகள் கொடுத்து உதவியுள்ளார்.இளஞ்சேட் சென்னியால் வெல்லப்பட்ட பாழியின் மகன் பதினோரு வேளிர்களை சேர்த்துக் கொண்டு போர்த் தொடுத்துள்ளான். இங்கு மலையமான் வேளிர்களில் சேர்க்கப்படவில்லை.கரிகாலனின் பெயரர்களாக அறியப்படும் கிள்ளிவளவன்,நலங்கிள்ளி,நெடுங்கிள்ளி ஆகியோரின் காலத்தில் சோழநாடு மூன்றாய்ப் பிரிந்தது.அதே சமயம் தான் மலையமான் திருமுடிக்காரி வேந்தனுக்கு பாதுகாப்பும் படை பலமும் அளிக்கக்கூடிய வலிமை பொருந்திய தனி முடி சூடிய சிற்றரசராக இருந்தார். மலையமான் மகள் வானவன் மாதேவி இக்குலமே.ஆதாரமும் வலுவாக உண்டு. டாக்டர்.ராசமாணிக்கனார் ஒரு கட்டுரையில் திருமுனைப்பாடி நரசிங்க முனையரையர் என்ற மலையமான் தான் சுந்தர சோழனை வளர்த்து பாதுகாத்தும் வந்துள்ளார்,என்று கூறியுள்ளார். ஏன் சோழர்கள் மீது மலையமான்களுக்கு இவ்வளவு அக்கறை?காரணம் மிகவும் வலுவானதே. சோழனின் கிளைக்குடி என்று வரலாற்றில் கூறப்படும் குடிகளில் பாதி மலையமான்களின் குடி பட்டங்களே,அவையாவன மலையமான்,சேதிராயர்,கொங்குராயர்,முனையரையர்,மழவரையர் ஆகும். சேதிராயர் என்பதை சூரிய குலத்தின் கிளைக்குடி என்றே கூறியுள்ளனர். உண்மை இவ்வாறு இருக்க சோழராக உரிமை கொள்ளும் முழு தகுதியும் பார்க்கவ குலத்திற்கு உள்ளது எனவும் சோழர்களுக்கு முன்பிருந்தே உடையார் பட்டமுள்ளதையும் சுட்டிக் காட்டியாயிற்று.இவ்வளவு ஏன் சோழர்களின் ஊர் பெயர் உடையார் குடி. உடையாளூர்,உடையார்கள் இன்றைக்கும் அதிகமாக வசிக்கும் ஊர் இங்குதான் ராஜராஜனின் சமாதியும் உண்டு.ராஜராஜனுக்கு உடையார் பட்டமும் உண்டு.

Comments
Post a Comment