பார்க்கவகுல வரலாற்று பதிப்பு
சுந்தர சோழன் இறந்தவுடன் அவரோடு சேர்ந்து உடன்கட்டை ஏறியவர் பார்க்கவ குல மலையமானின் மகளான வானவன் மாதேவி. க்ஷத்ரியப்பெண்கள் மட்டுமே உடன் கட்டை ஏறுதல் வழக்கம்.
இன்றைக்கும் நத்தமான்,சுருதிமான்,மலையமான் பரம்பரையினர் பார்க்கவ குல க்ஷத்ரியர் என்று அழைக்கப்படுகின்றனர்.
சோழர்களில் சுந்தர சோழனுக்கும் இரண்டாம் ராஜராஜனுக்கும்(மலையமான் மகள் அவனிமுழுதுடையாள்)பெண் கொடுத்த இவர்கள் மூவேந்தரோடும்,வேளிர்களோடும் மண உறவு கொண்டுள்ளனர்.
பார்கவ குலத்தார் வானவன்,சேரன்,மலையன், என்னும் குடிப்பெயருடைய மலையமான்களின் நேரடி வம்சத்தாராகவும் பாரி மற்றும் மூவேந்தரின் பெண்ணடி வாரிசாகவும் உள்ள குடும்பத்தினர்கள்.
காளியை குலதெய்வமாக கொண்ட போர்க்குலமான இவர்கள் சோழர்களுக்கு அநேக வெற்றிகளைப்பெற்றுத்தந்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன. சோழனது படை பலமாக,காவலாக விளங்கியவர்கள் மலையமான்கள் மட்டுமே.
மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன் என்பவர், திருமுடிக்காரியின் மைந்தர்கள் இருவருள் ஒருவர். இவர் சோழனின் சேனாதிபதியாக பொறுப்பேற்றவர். முள்ளூர் மலையை ஆண்டவர்.
சோழ மன்னன் பகை மன்னர்களால் தோற்கடிக்கப்பட்டு இவருடைய முள்ளூர் மலையில் அடைக்கலம் புகுந்தார். மலையமான் திருக்கண்ணன் பெரும்வீரன் என்பதால் பகைவரை போரிட்டு வென்று சோழ நாட்டை சோழனுக்கே மீட்டுக்கொடுத்தார் என்ற செய்தி புறநானூற்றுப்பாடலில் காணப்படுகிறது.
மன்னர்காலத்திற்கு பின்னர் போர்க்குடியினர் அனைவரும் விவசாயத்தில் ஈடுபட்டனர் என்னும் காலமாற்றத்திற்கு ஏற்ப இவர்களும் விவசாயக் குடிகளானார்கள். குறுநில மன்னர்கள், வேளிர்கள்,போர் மறவர்கள்,தளபதிகள், ஆகிய இவ்வினத்தார் ஜமீன்களாகவும்,பண்ணையார்களாகவும் மாறினர்.
பார்க்கவ வம்சத்து மன்னர்களில் சிலர்.......
தெய்வீகன் நரசிங்க உடையான்,
மலையமன்னர் நரசிங்க முனையரையர்,
நத்தமன்னர் மெய்ப்பொருள் நாயனார்,
சுருதிமன்னர் குலசேகரன்,(குலசேகர ஆழ்வார் )
மலையமான் திருமுடிக்காரி,
தேர்வண் மலையன் என்னும் தேர்வீகன்,
மலையமான் சோழியவேனாதிதிருக்கண்ணன்,
மலையன்,
வேள் பாரி,
பாண்டியராய திரணி சுருதிமான்,
சுருதிமன் நாயன் சோரன் ஆன இருங்கோளன் (இருங்கோவேள் வம்சம்)
சுருதிமன் மதியாண்டான் ஆன இருங்கோளன்
சுருதிமன் தேவன் பொழிமிகாமன் ஆன இருங்கோளன்
கூத்தன் வாணராயன் திரணி சுருதிமான்,
நுணாங்குறிச்சி சுருதிமான் அணஞ்சா ஆனைவிடப்பாடி,
ஊற்றத்தூருடைய சுருதிமான் சனனாதர் அரைய தேவனான வாண விச்சாதிர நாடாழ்வான்,
கிளியூர் மலையமான் பெரிய உடையானான சேதிராயன்,
சதிரன் மலையனான ராசேந்திர சோழ மலையமான்,
சூரியன் சாவன சகாயனான மலையகுலராசன்,
சூரியன் மழவனான மலையகுலராசன்,
சூரியன் பிரமன் சகாயனான மலையகுலராசன்,
கிளியூர் மலையமான் நானூற்றுவன் அத்தி ராஜேந்திர சோழ சேதிராயன்
கிளியூர் மலையமான் குலோத்துங்க சோழன் சேதிராயன்,
கிளியூர் மலையமான் அரச கம்பீர சேதிராயன்,
கிளியூர் ராசகம்பீர சேதிராயன் கலியபெருமாள் பெரிய நாயனான சேதிராயன்,
கிளியூர் ராசகம்பீர சேதிநாடன்,
ராசராச மலையராயன் ஆகிய அருளாளப்பெருமான் ராசராச சேதிராயன்,
கிளியூர் ஆகாரசூர மலையமான்,
ராசேந்திர சோழ மலையகுல ராசன்விக்கிரம சோழ சேதிராயன்.
சித்தவடத்தடிகள் எனும் நரசிம்ம வர்மன்
உத்தம சோழ மிலாடுடையான்
மிலாடுடையான் நரசிம்ம வர்மன் (௨)
சேதி திரு நாடன்
பெரிய உடையான் கரிய பெருமான் சொக்கப் பெருமாள்.
இறையூரன் சேதிராயன்.
பெரிய உடையான் கோவலராயன்
கரிகால சோழ ஆடையூர் நாடாழ்வான்
ராசராச சேதிராயன்(கோப்பெருஞ்சிங்கன் மருமகன்)
இவர்கள் போன்று இன்னும் எண்ணற்ற சிற்றரசர்களையும்,தளபதிகளையும்,வேளிர்களையும் கொண்ட அரச குடும்பமே பார்க்கவகுலம்.
அரசர்களாகவும்,வேளிர்களாகவும் இருந்த காலத்தில்
முனையரையர்,மலையமான்,கொங்கராயர்,சேதிராயன்,
மிலாடுடையார்,மலாடுடையார்,நத்தமான்,சுருதிமான், உடையான்,மலையமான்,சேதியராயன்,வன்னிய நாயகன்,பண்டரையர்,கோவலராயர்,வாணகோவரையன்,வாணராயர்,வாணவிச்சாதிரன்,காடவராயன்,(காடவர்களை ஆண்டவன்) பல்லவராயர்,அரையதேவன்,நாடாழ்வான்
போன்ற பட்டங்களுடன் ஆண்டு வந்தவர்கள்.
மலையமான்,நத்தமான்,சுருதிமான்,இம்மூவரும் அரசன் என்று பொருள் படும் உடையார் என்ற பொதுப்பட்டம் கொண்டவர்கள்.(சுருதிமான்)மூப்பனார் என்ற பட்டம் குல முதல்வர் (HEAD MAN)என்ற பொருளிலும்,நயினார்,என்றபட்டம் நாயன்மார் (மெய்ப்பொருள் மன்னர்,நரசிங்க முனையரையர்)வழியில் பிறந்தோர் என்ற அர்த்தத்தையும் கொண்டது. உடையார் என்பதின் உட்பிரிவு பட்டங்களே மேற்காண்பவை.
(கன்னடம்,தெலுங்கு பேசும் உடையார்கள், மண்ணுடையார்கள்(குயவர்), வெள்ளாள உடையார் என உடையார் பட்டம் கொண்டு பலர் இருப்பினும்,
பார்க்கவ குலத்தாருக்கு ஆதியிலிருந்தே உடையார் பட்டம் மலைநாட்டு அரசன் என்ற பொருளில் மலாடுடையார் என்ற பொருளில் வந்துள்ளது.மேற்கண்டோருக்கு பார்கவ குலத்தாரோடு எத்தொடர்பும் கிடையாது.
பார்க்கவ குல மலையமான், நத்தமான்,சுருதிமான் 🇧🇴🇧🇴🇧🇴🔥❤
ReplyDelete