பார்க்கவகுல வரலாறு

வேந்தர் குலப்பெருமைபடி வாழ்ந்து தமிழருக்கு பெயர் சேர்க்க!


 சுருதிமான் says: 19 January 2012 17:20 Reply
பார்கவ குலமென்பது முக்குலத்தில் ஓர் குலமான கள்ளர்குல பிரிவின்
தொன்மையான சோழ நாட்டு அரசவம்சத்தவர்களில் ஓர் குழுவினரின் பட்டமாகும்.
,மலையமான்கள்,சுருதிமான்கள்,ஓய்மான்கள்,சேதிராயர்கள் முனையரையர்கள்,முனையத்தரையர்கள்,மலையராயர்கள்,மலையரையர், மலையன் என்ற பட்டங்களையும் பெற்றவர்கள்.
சேதிநாடுஎன்றநடுநாடு,மலைநாடு,கோவலூர்,திருகோவலூர்,ஓய்மாநாடு, கிழியூர்,முனையூர்,
மலாடு,திருமுனைப்பாடி, போன்ற சேதிநாட்டு பகுதிகளை இரண்டாயிரம்
வருடங்களுக்கும் மேலாக சுருதிமான்,மலையமான்,நத்தமான்,என்னும்
குடிப்பெயருடனும்,சேதிநாட்டை ஆள்பவர்கள் என்பதால் சேதிராயர்கள்
என்ற பட்டங்களுடனும் ஆண்ட இனத்தவர்கள் என கல்வெட்டு
ஆதாரங்களும்,சங்ககால புறநானூற்றுபாடல்களும் தெரிவிக்கின்றன.
இக்குழுவினர் தங்களை கல்வெட்டுக்களில் பார்கவ குல சத்ரியர்கள்
என்றே பதிவு செய்துள்ளனர்.அவர்களின் வம்சத்தினரும் அவ்வாறே
அழைக்கப்படுகின்றனர்.இவர்கள் சோழனுக்கு பெண் கொடுக்கும்
அளவிற்கு மேன்மையும்,தகுதியும் பெற்றவர்களாகஇருந்தனர்.
சோழர்களில் ஓர் கிளையான சேதிராயர்
என்ற அரசகுல பரம்பரையினர்கள்.சுந்தரசோழனின் மனைவியும்
ராஜராஜ சோழனின் தாயாருமான வானவன்மாதேவி என்பவர்
திருக்கோவிலூர் மலையமான் சித்தவடவன் என்பவரின் மகளாவார்.
சோழ வம்சம் பார்கவ குலத்தோடு நெருங்கிய தொடர்புடையது என
வரலாற்றுஆய்வாளர்கள் உறுதிசெய்துள்ளனர்.மேலும் இரண்டாம்
ராஜராஜனுடைய மனைவி அவனிமுழுதுடையாள் என்பவரும்
மலையமான் மகளேயாவார்கள்.
மலையன்,மலையமான்திருமுடிக்காரி,தேர்வண்மலையன்,சோழியஏனாதி
திருக்கண்ணன்,தெய்வீகன்,போன்றோர் புறநானூற்றில் பாடல்கள் பல
பெற்ற சங்க கால மன்னர்கள். சேரமான் குலசேகரஆழ்வார்,மெய்பொருள்
நாயனார்,நரசிங்கமுனையரையர்,போன்றோர் இக்குலத்தில் தோன்றியவர்கள்.
மாமன்னன் ராஜராஜசோழனும் இக்குலமரபினனே ஆவார்.கள்ளர்குல அரச வம்சமாக
அறியப்பட்ட பதினாறு பட்டங்களில் மலையமான்கள் மற்றும் சேதிராயர்கள் போன்ற
பட்டப்பெயருடன் ஆண்டபுகழ் பெற்ற வம்சத்தினர் தான் பார்கவ குலத்தினர்.
பிரான்மலை,கொடுமலைக்குன்றம்,பிறமலை என்றெல்லாம் தற்போது
அழைக்கப்படும் பிரான்மலையை(இம்மலைப்பகுதியில் இருந்து தான் புகழ்
பெற்ற பிறமலைக்கள்ளர் என்ற வகுப்பினரும் மதுரை நோக்கி வந்ததாக
கூறப்படுகிறது).ஆண்ட பாரி மன்னனுக்கும் மலையமான்
திருமுடிக்காரிக்கும் ஏற்பட்டுள்ள மணஉறவு வரலாறு கல்வெட்டில்
உறுதி செய்து அறியப்பட்ட ஒரு சம்பவமாகும்.
வள்ளல் பாரி ஓரியக்குலத்தை சேர்ந்தவன். ஓரியர்=சக்கரவாள சக்கரவர்த்திகள்=நாகவம்சத்தினரின் தலைவர்கள்.பாரிவேள் இந்த வம்சத்தில் வந்தவன்.(உபரிசர வசு என்னும் சோழ மன்னனும் இவ்வம்சத்தவன்). நாகர்கள் என்று அழைக்கப்படும் மரபினரின் தலைவன்.
(விச்சாதரர்=வானவர்).கள்ளர் என்பார் வீரம் நிறைந்த நாகர்களே என்று கூறப்பட்டுள்ளது.அத்தகைய குடிப்பிறந்த பாரி வீரத்திலும் கொடையிலும் புகழ் ஓங்கியவன்.
மேலும் அவனது பறம்புமலையும்,அதைச்சுற்றியுள்ள முன்னூறு ஊர்களும்
மூவேந்தர்களின் எல்லைகளையும் தொட்டிருந்தது.இதனாலேயே பாரியிடம்
மூவேந்தரும் பெண் கேட்டிருக்கலாம்.பாரிபெண் தர மறுத்ததின் விளைவாக அவன் மீது போர்தொடுக்க மூவேந்தரும் ஒன்றுகூடி
போரிட்டும் அவனை வெல்ல இயலாது போகவே சூழ்ச்சியினால்
அவனைக்கொன்றதாக கபிலரின் பாடல்களின் மூலமாக அறிய முடிகிறது.
பாரியின் பெண்கள் அங்கவை,சங்கவை இருவரும் புலவர் கபிலர்
பொறுப்பில் இருந்தனர்.அவர் அவர்களை இறுதியாக பாரியைபோன்றே
இனத்திலும் வீரத்திலும் கொடையிலும் இணையான முள்ளூர் மலைநாட்டு கள்ளர் மலையமான்திருமுடிக்காரியின் மகன்
தேர்வன் மலையனுக்கு மணமுடித்துகொடுத்ததாக கல்வெட்டு ஆதாரங்கள் மூலம் அறியப்படுகிறது.எனவே பாரியின் வம்சமாகவும் பார்கவ குலத்தார்
கூறிக்கொள்வதும் அதற்கான சான்றுகளும் தெளிவாகவே உள்ளன.பாரி மற்றும் மலையமான்களின் வம்சத்தினராகவே வரலாற்றுஆய்வுகள் கூறுகின்றன .தற்காலத்தே இவர்கள் பார்கவ குல மூப்பனார்,
பார்கவ குல உடையார் என்ற பட்டங்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.
மூப்பனார் என்பது ஜாதிப்பெயர் கிடையாது.இனத்தின் மூத்த குடியினர் எனப்பொருள்படும் .(மைசூர் உடையார்கள் வேறு இனத்தவர்கள்.)
உடையார் என்பதின் உட்பிரிவு பட்டங்களே மூப்பனார்,நயினார்,என்பதாகு தஞ்சைக்.கள்ளர்குல அரசவம்சமாக பழங்காலம் முதலே அறியப்பட்டவர்களான
பார்க்கவ குல மூப்பனார்,பார்க்கவ குல உடையார்
என்ற சேதிராயர்களான பார்கவ குலத்தினர் மற்றும்
தஞ்சைக்கள்ளர்களான சோழர்கள் இருவரைப்ப்ற்றிய கல்வெட்டு இலக்கிய
வரலாற்று ஆதாரங்கள் அனைத்துமே சோழர்கள் கள்ளர் மரபினரே என உறுதிப்படுத்துகின்றன.

Comments

Post a Comment

Popular posts from this blog

பார்க்கவகுலம்

பார்க்கவகுல வரலாறு

மலையமான் திருமுடிக்காரி